
சென்னை, அக். 23-
இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், சென்னையில் இன்று (அக். 23) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.1,04,480-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருவதுடன், சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் மீண்டும் வட்டி விகிதத்தை
உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும், 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,13,984-க்கும் விற்பனையானது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.85,520-க்கு விற்பனையானது.















