Home மாவட்டங்கள் சென்னை தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு

தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு

சென்னை, நவ. 12-
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய புதிய தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்துக்குச் செல்வதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,370 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான விருப்பக் கடிதங்களை, ‘ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா’ (Hwashin Automotive India), ‘சியோன் இ-ஹுவா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா’ (Seoyon E-hwa Summit Automotive India) ஆகிய 2 நிறுவனங்கள், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் சென்னையில் நேற்று வழங்கின. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில், சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காவில் ஹுவாஸின் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.850 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்த முதலீடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய திட்ட மேம்பாடு ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், அந்த நிறுவனத்தின் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் விரிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.