
சென்னை: நவ. 23-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கம் பகுதியில் தமிழக பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்டத் தலைவர் கிரி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று, கையில் அகல் விளக்குகளை ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியபோது, “தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது தவறு. உடனடியாக அந்த மனுவை திரும்பப் பெற வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.













