Home மாவட்டங்கள் சென்னை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்

மதுரை: நவ. 28-
நாடு முழுவதும் பெறும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புற குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையான
சிஆர் பிஎப் வீரர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ள னர். கோவிலின் புதிய அறங்காவலர்களாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் இன்று காலை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர் அப்போது அவர்கள் தீபம் ஏற்ற வேண்டிய பூஜை பொருட்களை கையில் ஏந்தி வந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் சி ஆர் பி எப் வீரர்களுக்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் நிகழ்வை காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடத்தினர். பரபரப்பான இந்த சூழ்நிலையில் இன்று மாலை தீபம் ஏற்றப்படுகிறது அதற்கான ஏற்பாடுகள் காலை முதல் செய்யப்பட்டு வந்தது மலை உச்சியில் உள்ள தீபத்தூனை சுற்றி மர சாரங்கள் அமைக்கும் பணி நடந்தது அதன் மீது மேடை அமைக்கப்படுகிறது அந்த மேடை மீது தீபத்தூரில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று (நவ.28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையினர் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து பாஜக, இந்து முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள் குவிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது. மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து கமாண்டர் சுனில் குமார் தலைமையில் 130 பேர் அடங்கிய மத்திய ரிசர்வ் படையினர் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு வந்தனர். அவர்கள் குழுவாக பிரிந்து திருப்பரங்குன்றம் கோயில் மலைக்கு செல்லும் வழி பாதைகளில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கமாண்டர் சுனில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் இருக்கும் பகுதி வழித்தடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கொடுப்பது கொடுத்த ஆய்வு செய்தனர். மேலும் பெங்களூரில் இருந்தும் மத்திய ரிசர்வ் படையினர் திருப்பரங்குன்றம் வருகின்றனர்.
மலை மற்றும் கோயில் தீபத்தூண் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருப்பரங்குன்றம் நகர் பகுதிகளில் மலையை சுற்றிலும் தமிழக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் தீபத்துணில் தீபம் ஏற்றுவதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தீபத் தூண் சுற்றிலும் கம்புகள் கட்டபடுகின்றன.
லைட் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பாஜக, இந்து முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களும்,பக்தர்களும் திருப்பரங்குன்றம் நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.