Home மாவட்டங்கள் சென்னை திருப்பரங்குன்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

திருப்பரங்குன்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரை: நவ. 23-
தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற உத்​தரவுக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்ள நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் மலைப் பகுதி​யில் போலீஸ் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.
திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில், இந்த ஆண்டு மட்​டும் கார்த்​திகை தீபம் ஏற்ற உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இந்த ஆண்டு தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படும் என பக்​தர்​கள் பெரும் எதிர்​பார்ப்​பி்ல் இருந்​தனர்.தீபத் திரு​விழாவை வெகு​விமரிசையாக கொண்​டாட மக்​கள் தயாராகி வரும் நிலை​யில், தீபம் ஏற்ற வேண்​டும் என்ற உத்​தரவுக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு நேற்று திடீரென சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளது. இத​னால், திருப்​பரங்​குன்​றத்​தில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.
கடந்த ஆண்டு தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அரசு நிறைவேற்​றாத நிலை​யில், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்து அமைப்​பினர் திரண்டு பெரிய அளவில் போராட்​டம் நடத்​தினர். அதுபோன்ற சூழல் தற்​போது மீண்​டும் உரு​வாகி உள்​ளது.
தீபம் ஏற்​றும் விவகாரத்​தில் தமிழக அரசு எதிர்ப்பு மன​நிலை​யில் உள்​ள​தால், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்து அமைப்​பினர் மற்​றும் பக்​தர்​கள் அதிக அளவில் திரள வாய்ப்​புள்​ள​தாக காவல் துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்​ளது. இத​னால், கோயில் பகுதி மற்​றும் மலை​யைச் சுற்​றி​லும் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். மலை​யிலுள்ள தீபத்​தூண், தர்கா ஆகிய இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.
மலைக்​குச் செல்​லும் பழநி ஆண்​ட​வர் கோயில் பாதையில் உள்ள படிக்​கட்​டுகளை மறித்து தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு போலீ​ஸார் இரவு, பகலாக பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.