Home மாவட்டங்கள் சென்னை தென்காசி நூலகத்திலும் போலி புத்தகங்கள்

தென்காசி நூலகத்திலும் போலி புத்தகங்கள்

தென்காசி: நவ. 12-
கோவையைத் தொடர்ந்து, தென்​காசி மாவட்ட மைய நூல​கத்​திலும், ரூ.27 லட்​சம் மதிப்​பில் 2,293 போலி புத்​தகங்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டிருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.
கோவை பெரியார் அறி​வுலக நூல​கத்​தில் புத்​தகங்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டதில் நடந்த முறைகேடு பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து தென்​காசி மாவட்ட மைய நூல​கத்​தில் கொள்​முதல் செய்​யப்​பட்ட புத்​தகங்​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.
இதில், ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட அகல் விளக்கு மற்​றும் பீனிக்ஸ் பதிப்​பகத்​தின் 2,293 புத்​தகங்​கள் இருந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது. பல புத்​தகங்​களின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்​தது. இந்த புத்​தகங்​களை நூலக அலு​வலர்​கள் அப்​புறப்​படுத்தி, தனி அறை​யில் வைத்​துள்​ளனர். இவற்​றின் மதிப்பு சுமார் ரூ.27 லட்​சம் இருக்​கும் என்று கூறப்​படு​கிறது.
அகற்​றப்​பட்ட புத்​தகங்​கள் நிவேதா அன்​பழகன், நிவேதா சுப்​பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா சுப்​பிரமணி​யன், மனிஷா அர்​ஜுன், மோகனா ரவி, மோகனா பால்​ராஜ், கலா முருகன், தாமரை பன்​னீர், ரிஸ்தேவன் மகேந்​திரன், அனுஷா தனுஷ், சூர்யா அனுஷ்கா உள்​ளிட்ட பல்​வேறு அறியப்​படாத பெயர்​களில் எழுத்​தாளர்​கள் எழுதி​ய​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.தென்​காசி மாவட்​டம் கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக தொடங்​கப்​பட்​டது. இங்​குள்ள இ.சி.ஈஸ்வரன்​பிள்ளை அரசு ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில், மாவட்ட மைய நூல​கம் கட்​டப்​பட்​டது. இதனை, 2025-ம் ஆண்டு அக்.29-ம் தேதி அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்டா​லின் திறந்​து​வைத்​தார். பின்னர், நூல​கத்​துக்கு புத்​தகங்கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. கடந்த ஆண்டு டிசம்​பரில் இருந்து நூல​கத்​துக்கு வந்த புத்​தகங்​களில் போலி புத்​தகங்​களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.