Home செய்திகள் தேசிய செய்திகள் விவசாயிகளே அரசின் முதல் முன்னுரிமை: மோடி

விவசாயிகளே அரசின் முதல் முன்னுரிமை: மோடி

புதுடில்லி: நவ. 12–
சர்வதேச அளவில் நெருக்கடியான சூழல் நிலவி வந்தாலும், நாட்டின் விவசாயிகளே மத்திய அரசின் முதல் முன்னுரிமையாக உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2026–27-ம் ஆண்டுக்கான குளிர்கால பருவ சாகுபடிக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, குளிர்கால பருவ உர மானியத்துக்காக சுமார் ரூ.62,370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025–26-ம் ஆண்டின் ரபி பருவ மானியத் தொகையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஒதுக்கீடு சுமார் ரூ.24,418 கோடி அதிகமாகும். மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நாட்டின் விவசாயிகள் எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வந்தபோதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக, 2026–27-ம் ஆண்டுக்கான குளிர்கால பருவ உர மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும். அவை நியாயமான மற்றும் கட்டுப்படியான விலையில் வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“நாட்டின் விவசாயிகள் எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வந்தபோதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.இதன் ஒரு பகுதியாக, 2026–27-ம் ஆண்டுக்கான குளிர்கால பருவ உர மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும். அவை நியாயமான மற்றும் கட்டுப்படியான விலையில் வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.