Home விளையாட்டு தோனியை பாராட்டிய சச்சின்

தோனியை பாராட்டிய சச்சின்

மும்பை. நவ. 19–-
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரைப் பாராட்டி உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ஆரம்பகால ஆட்டத்தைப் பார்த்தபோதே அவரிடம் தனித்துவமான திறமை இருப்பதை உணர்ந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தோனி பேட்டிங் செய்ததைப் பார்த்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். அப்போது தோனியின் அதிரடி பேட்டிங் திறனை கவனித்த சச்சின், முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியிடம், தோனியிடம் ஏதோ ஒரு சிறப்பான திறமை இருப்பதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பும் அவரது திறன் அப்போதே தனித்துவமாகத் தெரிந்ததாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார். தோனி எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார் என்று அப்போதே நம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தோனியுடன் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொண்ட நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை என்றும் சச்சின் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத பல தருணங்களில் தோனியுடன் இணைந்து பங்கேற்றதை சச்சின் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார். தோனியின் ஆரம்பகால ஆட்டத்திலேயே அவரது திறமையை அடையாளம் கண்ட அனுபவத்தையும், அவருடன் அணியில் இருந்த மகிழ்ச்சியான நாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.