Home முக்கிய செய்தி ‘நிஷாந்த்’தை விசாரிக்க அனுமதி

‘நிஷாந்த்’தை விசாரிக்க அனுமதி

மதுரை: நவ. 20-
மதுரை நகைக்​கடை கொள்ளை வழக்​கில் கைதான யூடியூப்​பர் ‘நிஷாந்த்’தை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க நீதி​மன்​றம் அனுமதி வழங்​கி​யுள்​ளது.
மதுரை பைபாஸ் ரோடு ‘தனிஷ்க்’ நகைக்​கடை​யில் கடந்த நவ. 12-ல் சுமார் ரூ.15 கோடி மதிப்​பிலான 11.384 கிலோ தங்க நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டன. எஸ்.எஸ்.காலனி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து பழங்​காநத்​தத்​தைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்​தின் தோழியும், இன்ஸ்டா பிரபலமுமான திருப்​பாலை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த மீனாட்சி ஆகியோரை கைது செய்து, அவர்​களிடம் இருந்து நகைகளை மீட்​டனர். மூவரும் மதுரை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.
இந்​நிலை​யில், நிஷாந்த்தை 5 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் எஸ்.எஸ்.காலனி போலீ​ஸார் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு முதலா​வது விரைவு நீதி​மன்ற நீதிபதி ராஜபிரபு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.
போலீஸ் தரப்​பில், ‘இது முக்​கிய கொள்ளை வழக்கு. நிஷாந்த் பல நாட்​கள் திட்​ட​மிட்டு கொள்​ளை​யடித்​துள்​ளார். இவ்​வளவு பெரிய கொள்​ளை​யில் நிஷாந்த் ஒரு​வர் மட்​டுமே ஈடு​பட்​டிருப்​பாரா என்ற சந்​தேகம் உள்​ளது. கொள்​ளைக்கு பிறகு நிஷாந்த் தப்​பிச் செல்ல சிலர் உதவி செய்​துள்​ளனர். எனவே காவலில் எடுத்து விசா​ரித்​தால் மட்​டுமே முழு உண்​மையும் தெரிய​வரும்’ என்​றனர்.