
பாட்டியாலா, நவ. 7-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் கர்மபூமி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சராய் பஞ்சாரா அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதில் 3 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும் அவசரகால மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. அரசு ரயில்வே காவல் ஆய்வாளர் குர்ப்ரீத் சிங் கூறுகையில், ரயில் பெட்டியில் இருந்த மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.













