Home விளையாட்டு பஞ்சாப் கிங்ஸுக்கு மாறினார் ஹர்திக் பாண்ட்யா

பஞ்சாப் கிங்ஸுக்கு மாறினார் ஹர்திக் பாண்ட்யா

மும்பை, நவ. 11-
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, பஞ்சாப் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக இந்த அணிகள் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹர்திக் பாண்ட்யாவை டிரேடு செய்ய பல அணிகள் முயற்சி மேற்கொண்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளைத் தவிர, மற்ற அணிகள் ஹர்திக்கைப் பெற விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் கடந்த இரண்டு சீசன்களில் மும்பை அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹர்திக் அணியில் இருந்து வெளியேற விரும்பியதாகவும், அவரை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் அணியும் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையுடன் பஞ்சாப் அணியில் இணைகிறார். அதே ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையுடன் அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்குச் செல்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்திக், அந்த அணி வென்ற நான்கு ஐபிஎல் கோப்பைகளில் பங்காற்றியதுடன், முக்கிய ஆல்-ரவுண்டராகவும் செயல்பட்டுள்ளார். அர்ஷ்தீப்சிங், பஞ்சாப் அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.