Home விளையாட்டு பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 166 பேர்

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 166 பேர்

புதுடெல்லி, அக். 14- ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 18-ம் தேதி தொடங்குகின்றன. இப்போட்டியில் இந்தியா சார்பில் 166 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய அணியில் வீரர், வீராங்கனைகளுடன் 94 அதிகாரிகள் மற்றும் உதவி பயிற்சியாளர்களும், 15 பணியாளர்களும் இடம்பெறுகின்றனர். இதன்படி, இந்தியக் குழுவில் மொத்தம் 275 பேர் இடம்பெற உள்ளனர்.இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 10 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.