
பெங்களூரு, நவ. 2-
பெங்களூரு மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் பிராந்திய சிறப்பு உணவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிவேக ரயிலில் வழங்கப்படும் காலை மற்றும் இரவு உணவு விவரங்கள் வெளியாகியுள்ளன: காலை தேநீர்: டீ, காபி அல்லது கிரீன் டீ (சர்க்கரை இல்லாத விருப்பத்துடன்) மற்றும் 2 பிஸ்கட்டுகள் வழங்கப்படும். காலை உணவு (ஏதேனும் ஒன்று): 2 இட்லி, 1 வடை மற்றும் சாம்பார்; மசாலா போஹா அல்லது வெஜ் உப்புமா கேசரி பாத் -உடன்; 2 வெஜ் கட்லெட் மற்றும் பிரெட்; அல்லது 2 முட்டைக் ஆம்லெட் மற்றும் பிரெட். இரவு உணவு: லெமன் சாதம் அல்லது சாதாரண சாதம், 3 சப்பாத்திகள் அல்லது 2 பரோட்டாக்கள், கர்நாடக முறை சாம்பார் அல்லது மஞ்சள் பருப்பு தட்கா, பன்னீர் அல்லது கோழி (சிக்கன்) கறி உணவு, தயிர் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்படும்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்துத் தொடங்கிய இந்தச் சேவையானது, இரு மாநகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, பயணிகளுக்குச் சுவையான பிராந்திய உணவுகளையும் உறுதி செய்கிறது.













