Home மாவட்டங்கள் பெங்களூர் மகளிர் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன்

ஈரோடு: நவ. 4-
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கியுடன் இணைந்த கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். ெருந்துறை ருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் திட்ட அலுவலர்கள் சார்பில் மாநில அளவிலான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இவ்விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதல்வர் விஜய், 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கினார். மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைத் தொழில்முனைவோராக உருவாக்கு வதே இத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, 38 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருட்களின் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். பொருட்களின் தயாரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மகளிர் குழுவினர் தயாரித்த தனது உருவப்படம் இடம்பெற்ற மரச்சிற்பம், படுக்கை விரிப்பு, பத்தமடைப் பாய், நடனமங்கை ஓவியம், வாழைநார் பை உள்ளிட்ட பொருட்களை முதல்வர், பணம் கொடுத்து வாங்கினார்.தொடர்ந்து, நீலகிரி மலைவாழ் மக்கள் தயாரித்த தேநீரையும் ருசித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த்,செங்கோட்டையன், விஜய் பாலாஜி, அருண்ராஜ், விஜயலட்சுமி, சம்பத்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.