Home செய்திகள் தேசிய செய்திகள் மாதம் ரூ.1 லட்சம் யு.பி.ஐ. ரசீதுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லை

மாதம் ரூ.1 லட்சம் யு.பி.ஐ. ரசீதுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லை

புதுடெல்லி, செப். 23:
மாதம் ரூ.1 லட்சம் வரையிலான யு.பி.ஐ. ரசீதுகளைக் கொண்ட வணிகர்கள், வணிகர் தள்ளுபடி வீதம் (எம்.டி.ஆர்.) செலுத்த வேண்டியதில்லை.
எனவே, அந்தத் தொகைக்கு எம்.டி.ஆர். மீதான ஜி.எஸ்.டி. பிரச்சினையும் இல்லை என்று இந்திய தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (என்.பி.சி.ஐ.) விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்–வணிகர் (பி2எம்.) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும், 96 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரூ.2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மீதான ஜி.எஸ்.டி. சுமை குறித்து வணிகர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த என்.பி.சி.ஐ., ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பி2எம். பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எம்.டி.ஆர். பொருந்தும் என்று கூறியது. ரூ.2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். பூஜ்ஜியமாகவே தொடர்வதால், அவற்றுக்கு ஜி.எஸ்.டி.யும் பூஜ்ஜியமாகும் எனத் தெரிவித்தது. அரசின் தரவுகளின்படி, வணிகர்களின் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் 96 சதவீதத்துக்கும் அதிகமானவை ரூ.2 ஆயிரம் வரையிலானவையாகும். எனவே, பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர்.
பொருந்தாது என்றும், அதனால் ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது என்றும் என்.பி.சி.ஐ. விளக்கியுள்ளது.