Home மாவட்டங்கள் சென்னை மீண்டும் கோழிகள் உயிரிழப்பு

மீண்டும் கோழிகள் உயிரிழப்பு

கடலூர்/நாமக்கல்: நவ. 27-
கடலூர் மாவட்​டம் தியாகவல்லி, நொச்​சிக்​காடு, தம்​மனாம்​பேட்டை, குள்​ளஞ்​சாவடி பகுதி​களில் உள்ள வளர்ப்​புக்​கோழி பண்​ணைகளில் கடந்த அக்​டோபர் மாத இறுதி வாரத்​தில் கோழிகள் மர்ம நோயால் கொத்​துக்​கொத்​தாக உயி​ரிழந்​தன. கால்​நடை பராமரிப்​புத்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து, இறந்த கோழிகளின் மாதி​ரி​களை சேகரித்து ஆய்​வுக்கு அனுப்​பினர். ஆய்​வின் முடி​வில் பறவைக்​காய்ச்​சல் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.
இதையடுத்து பாதிக்​கப்​பட்ட பகுதி​யி​லிருந்து ஒரு கிலோமீட்​டர் வரையி​லான பண்​ணை​யில் உள்ள 40 ஆயிரம் கோழிகள் அழிக்​கப்​பட்​டன. புதிய கோழிகள் வளர்ப்​ப​தற்​கும் தடை விதிக்​கப்​பட்​டது.
இதற்​கிடையே கடலூர் அடுத்த நொச்​சிக்​காடு மற்​றும் நடுத்​திட்டு பகுதி​யில் உள்ள கோழி பண்​ணைகளில் இருந்த ஏராளமான கோழிகள் நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தன. இதுபற்றி அறிந்த கடலூர் கால்​நடை பராமரிப்பு துறை அதி​காரி​கள் நேற்று காலை அந்த பண்​ணைகளுக்கு சென்​றனர். உயி​ரிழந்த கோழிகளில் இருந்து மாதி​ரி​கள் சேகரித்து, அவை பறவை காய்ச்​சல் பாதிப்​பால் இறந்​தனவா என ஆய்வு செய்​வதற்​காக நாமக்​கல்​லில் உள்ள நோய் கண்​டறியும் ஆய்​வகத்​துக்கு அனுப்பி வைத்​தனர்.
பின்​னர் 2 பண்​ணைகளில் இருந்த கோழிகளை​யும் உயிருடன் புதைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. இதற்​காக பண்​ணைகளின் அரு​கில் பொக்​லைன் இயந்​திரம் மூலம் பெரிய அளவி​லான பள்​ளம் தோண்​டப்​பட்​டது. பின்​னர் அந்த பள்​ளத்​தில் கோழிகள் அனைத்​தும் உயிருடன் போடப்​பட்டு, அதன் மேல் பிளீச்​சிங் பவுடர் தூவப்​பட்டு புதைக்​கப்​பட்​டன.
பாதிக்​கப்​பட்ட கோழிப்​பண்ணை உரிமையாளர்​கள் தங்​களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​துள்​ளனர். இது​தொடர்​பாக கால்​நடை பராமரிப்​புத்​துறை இணை இயக்​குநரிடம் விளக்​கம் பெற முயற்​சித்​த​போது அவர் போனை எடுக்கவில்லை.
நாமக்​கல்லில் முன்னெச்சரிக்கை: நாமக்​கல் மாவட்ட கோழிப்​பண்​ணைகளி​லும் பாது​காப்பு நட​வடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பண்​ணைகளுக்​குள் நுழையும் வாக​னங்​களுக்கு கிரு​மிநாசினி தெளிக்​கப்​படு​கிறது.
பண்​ணைத் தொழிலா​ளர்​கள் கிரு​மிநாசினி நிரப்​பப்​பட்ட தொட்​டி​யில் கால்​களை நனைத்த பின்​னரே வளாகத்​துக்​குள் அனுமதிக்​கப்​படு​கின்​றனர். மேலும், பண்ணை வளாகம் மற்​றும் சுற்​றுப்​புறங்​களைத் தூய்​மைப்​படுத்தி கிரு​மிநாசினி தெளிக்​கும் பணிகளி​லும் பண்​ணை​யாளர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர்.