Home செய்திகள் தேசிய செய்திகள் மேலோனி சாதனை: மோடி வாழ்த்து

மேலோனி சாதனை: மோடி வாழ்த்து

புதுடெல்லி, செப். 5- இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மேலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார். 1946 ஆம் ஆண்டு குடியரசாக மாறிய இத்தாலியில் கடந்த 80 ஆண்டுகளில் 68 அரசுகள் ஆட்சி செய்துள்ளன. 2001 ஜூன் 11 முதல் 2005 ஏப்ரல் 23 வரை சில்வியோ பெர்லுஸ்கோனி 1,412 நாட்கள் பிரதமராக நீடித்தார். இதுவரை இத்தாலியின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் அவர். 2022 அக்டோபர் 22 அன்று ஜார்ஜியா மேலோனி இத்தாலியின் பிரதமராக பதவி ஏற்றார். கடந்த 1,413 நாட்களை கடந்த அவர், முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில், “எனது நண்பர் மேலோனிக்கு மனமார வாழ்த்துக்கள். அவரது தலைமை மீது இத்தாலி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் விதமாக உறவு வலுப்பெறும்,” என்று குறிப்பிட்டார்.
மேலோனி வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடிக்கு நன்றி. ஐஎம்இசி வர்த்தக வழித்தட திட்டத்தை நிறைவேற்ற இத்தாலி, இந்தியா இணைந்து செயல்படும்,” என்று தெரிவித்துள்ளார்.