Home மாவட்டங்கள் சென்னை ராகுல் கைதுக்கு தவெக எதிர்ப்பு

ராகுல் கைதுக்கு தவெக எதிர்ப்பு

சென்னை: அக். 8-
தமிழக வெற்றிக் கழகத் தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
எஸ்ஐஆர் நடைமுறைகளை முன்னிறுத்தி, புதுதில்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.