Home செய்திகள் தேசிய செய்திகள் ‘ராமாயணா’ படக்குழு எச்சரிக்கை

‘ராமாயணா’ படக்குழு எச்சரிக்கை

மும்பை: நவ.9
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் பரப்பப்பட்டு வருவதாக தயாரிப்புக் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது.