
மைசூரு, நவ. 9-
மைசூரு மாவட்டம், மண்டஹள்ளி விமான நிலையம் அருகே உள்ள மராசே மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதி கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். மண்டக்கல்லி விமான நிலையத்தின் நஞ்சன்கூடு சாலையில் உள்ள வளாகத்துக்கு எதிரே மராசே கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ஹொசஹுண்டி, குடுமனஹள்ளி மற்றும் ஜேபி நகரை இணைக்கும் பாலம் பகுதிகளிலும் புலி தென்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக மண்டஹள்ளி மராசே, ஹொசஹுண்டி, குடுமனஹள்ளி கிராமம் மற்றும் ஜேபி நகரை இணைக்கும் பாலம் அருகே ஒரு புலி தொடர்ந்து தென்படுகிறது. இதனால், கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் மண்டக்கல்லி விமான நிலையம் அருகே ஒரு புலி காணப்பட்டது” என்றனர்.அப்போது வனத்துறையினர் விலங்குகளின் உதவியுடன் சில நாட்கள் புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், அந்தப் புலி கூண்டில் சிக்காமல் தப்பியது. பின்னர், சில நாட்கள் கழித்து அதே புலி பெமல் வளாகத்தில் சுற்றித் திரிந்ததாகவும், அங்கும் சில மாதங்கள் பிடிபடாமல் தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, வனத்துறையினர் அந்தப் புலியைப் பிடித்து, கிராம மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













