Home மாவட்டங்கள் பெங்களூர் விபத்து – கணவன் மனைவி பலி

விபத்து – கணவன் மனைவி பலி

தார்வாட்: செப். 22-
ஹூப்ளி – கதக் பைபாஸ் சாலையில் கூரியர் வாகனம் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயராஜ நகரைச் சேர்ந்த சுகுமார் திகலா மற்றும் அவரது மனைவி ரஜனி திகலா ஆகியோரே இந்த விபத்தில் பலியான தம்பதியாவர். ரஜனி திகலா ஹூப்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்ததும், ரஜனியை அவரது கணவர் சுகுமார் பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த கூரியர் சரக்கு வாகனம், எதிர்பாராதவிதமாக பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் ரபசத்தில் தூக்கி வீசப்பட்ட தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.
விபத்து குறித்து தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூரியர் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.