Home விளையாட்டு 3-வது டி20: 14 ரன்களில் இந்தியா வெற்றி

3-வது டி20: 14 ரன்களில் இந்தியா வெற்றி

இந்தூர், அக். 12- மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 20 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 223 ரன்​கள் குவித்​தது. அபிஷேக் சர்மா அதிரடி​யாக விளை​யாடி 30 பந்​துகளில் 69 ரன்​கள் குவித்​தார். இந்​தி​யா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​களுக்கு இடையி​லான சர்​வ​தேச டி20 தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற்று வரு​கிறது. 2 போட்​டிகள் முடிந்த நிலை​யில் இரு அணி​களும் தலா ஒரு வெற்​றியைப் பெற்று தொடரில் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளன. இந்​நிலை​யில் இந்​தூரில் உள்ள ஹோல்​கர் மைதானத்​தில் நேற்று இரவு 7 மணிக்கு 3-வது டி20 ஆட்​டம் நடை​பெற்​றது.டாஸில் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ஷாய் ஹோப், இந்​தி​யாவை பேட்​டிங் செய்ய அழைத்​தார். தொடக்க ஆட்​டக்​காரர்​களாக சஞ்சு சாம்​சனும், அபிஷேக் சர்​மா​வும் களமிறங்​கினர். கடந்த போட்​டி​யில் அதிரடி​யாக விளை​யாடி 82 ரன்​கள் குவித்த சஞ்சு சாம்​சன் நேற்​றைய ஆட்​டத்​தில் 3 ரன்​களி​லேயே பெவிலியன் திரும்பி ரசிகர்​களை ஏமாற்​றி​னார். பின்​னர் அபிஷேக் சர்​மாவுடன் இஷான் கிஷன் இணைந்து அதிரடி​யாக விளை​யாடி​னார்.