Home மாவட்டங்கள் பெங்களூர் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

30 கிலோ தங்க நகைகள் கொள்ளை

மதுரை: நவ. 13-
மதுரை பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வணிக வளாகம் உள்ளது.
இங் குகட்டுமான பணிகள் முழுமையாக முடியும் முன்னரே தீபாவளி விற்பனையை கணக்கில் கொண்டு பிரபல தனியார் நிறுவனத்தின் (தனிஷ்க்) நகைக்கடை திறக்கப்பட்டது.
முதல் தளத்தில் மட்டும் நகை விற்பனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து கடை பூட்டப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையைத் திறந்தபோது ரேக்குகளில் வைத்திருந்த நகைகளைக்
காணவில்லை. சில நகைகள் சிதறிக் கிடந்தன. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். கடை ஊழியர்கள், கட்டுமானப்
பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
நடத்தப்பட்டது.முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் பின்புறம் மின்தூக்கி அமைப்பதற்காகப் போடப்பட்டிருந்த சாரம் வழியாக கொள்ளையர்கள் கடையின் மேலே ஏறிச் சென்றது தெரியவந்துள்ளது. அங்கிருந்த எக்ஸாஸ்ட் பேனை அகற்றிவிட்டு, அதன் வழியாகக் கடைக்குள் புகுந்துள்ளனர்.