Home பக்தி பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில் பீலி வைத்து சிறப்பு வழி​பாடு நடத்​தப்​பட்​டது. தேனி மாவட்​டத்​தின் தமிழக எல்​லை​யான விண்​ணேற்​றிப்​பாறை எனும் இடத்​தில் மங்​கல தேவி கண்​ணகி கோயில் அமைந்​துள்​ளது. மதுரையை எரித்​து​விட்டு வைகை ஆற்​றங்​கரை வழியே தலை​விரி கோல​மாக வந்த கண்​ணகிக்​கு, கோவலன் மங்​கல​நாண் பூட்டி இங்​கிருந்து விண்​ணுக்கு அழைத்​துச் சென்​ற​தாக ஒரு நம்​பிக்​கை. இதனால், கணவனை இழந்​தா​லும் மங்​கலதேவி கண்​ணகி என்ற பெயரிலேயே இத்​திருத்​தலம் அழைக்​கப்​படு​கிறது. இக்​கோ​யிலுக்கு தமிழகத்​தின் கூடலூர் அருகே உள்ள பளியன்​குடி வழி​யாக 6.6 கி.மீ. தூரம் நடை​பாதை வழி​யாக​வும், கேரளா​வின் குமுளி, கொக்​கரகண்​டம் பகு​தி​யில் 14 கி.மீ. ஜீப் பாதை வழி​யாக​வும் செல்​லலாம். கோயில் அமைந்​துள்ள இடம் வனப்​பகுதி என்​ப​தால் சித்திரை மாத முழுநில​வன்று ஒரு நாள் மட்​டும் வழி​பாட்​டுக்​காக பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். அதன்​படி, கோலாகல​மாக நேற்று விழா நடை​பெற்​றது. இங்கு கண்​ணகிக்கு சிதிலமடைந்த சிலையே இருப்​ப​தால் திரு​விழாவை முன்​னிட்டு நேற்று அதி​காலை அம்​மனுக்கு உருக்​கொடுக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. தொடர்ந்​து, தமிழகம் சார்​பில் பூசாரி ராஜலிங்​கம் அம்​மனுக்கு சர்வ அலங்​காரம் செய்து சிறப்பு வழி​பாடு​களை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்​து, கையில் சிலம்​பு, வளை​யல், மங்​கல​நாணுடன் கண்​ணகி காட்​சி​யளித்​தார். பச்​சைப் பட்​டுடன் அருள்​பாலித்த மங்​கலதே​வியை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.