Home மாவட்டங்கள் பெங்களூர் செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்

செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்

சென்னை: ஜூலை 31-
​​டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் முறை​கேடு வழக்கில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. தலைமறை​வான செந்​தில் பாலாஜியைப் போலீ​ஸார் தேடி வருகின்​றனர்.
முந்​தைய திமுக ஆட்​சி​யில் டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதன் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.​வி​சாகன், டாஸ்​மாக் முன்​னாள் மண்டல முது​நிலை மேலா​ளர்​கள் டி.​ராமதுரை முரு​கன், ஆர்​.பன்​னீர்​செல்​வம், செந்​தில் பாலாஜி​யின் முன்​னாள் நேர்​முக உதவி​யாளர் பாஸ்​கர், செந்​தில் பாலாஜி​யின் நண்​பர்​கள் ரத்​தேஷ் ராஜ், மூலனூர் கார்த்​திக் ஆகிய 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​யப்பட்டுள்ளது.
இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி செந்​தில் பாலாஜி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்​போது செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, ‘‘கடந்த ஆட்​சி​யில் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், விசா​ரணை நடத்த உச்ச நீதி​மன்​றம் தடை விதித்துள்ளது.