
இஸ்லாமாபாத், ஆக. 5– பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. மோஷின் நக்வி மறைமுகமாக ஷெபாஸ் ஷெரீப் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருடன் சேர்ந்து ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். பாகிஸ்தானில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்தியாவசிய வசதிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று போராடி வருகின்றனர். இதில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு தானே சுதந்திரம் அறிவித்து கொண்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராடும் மக்கள் போலீஸ் மற்றும் ராணுவத்தில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பெருங்குழப்பத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருப்பவர் மோஷின் நக்வி. இவர் சமீபகாலமாக கூறி வரும் கருத்துகள் தற்போது பாகிஸ்தானை அதிர வைத்துள்ளனர்.











