Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்

நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்

காத்மாண்டு: ஆகஸ்ட் 28-
நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா அனுப்​பியது.
மலைப்​பிரதேச​மான நேபாள நாட்​டின் வடக்கே திபெத் எல்லை உள்​ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி என்ற நதி ஓடு​கிறது. இந்த நதி​யில் நேற்று முன்​தினம் காலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.
பல அடி உயரத்​துக்​குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெரு​வெள்​ளம் ரசு​வா, தாதிங் மற்​றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்​டங்​களைப் புரட்​டிப் போட்​டது. வானுயர்ந்த கட்​டிடங்​கள், சாலை​கள், பாலங்​கள், நீர்​மின் நிலை​யங்​கள் என அனைத்​தை​யும் வெள்​ளம் சுருட்​டிச் சென்​றது.
இடி​பாடு​களு​டன், சேறும் சகதி​யு​மாய் பாய்ந்​தோடிய வெள்​ளத்​தில் ஏராள​மான மக்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும், 800 வெளி​நாட்​டினர் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளள்​ள​தாக நேபாள அரசு நேற்று தெரி​வித்​தது இதுகுறித்து நேபாள காவல் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வெள்​ளம் பாதித்த மாவட்​டங்​களில் முழு வீச்​சில் மீட்​புப் பணி​கள் நடை​பெறு​கின்​றன. 5,000-க்​கும் மேற்​பட்ட ராணுவ வீரர்​கள் மற்​றும் போலீ​ஸார் மீட்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இது​வரை 359 உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன.வெளி​நாட்​டினர் உட்பட 1,500 பேர் மாய​மாகி உள்​ளனர். அவர்​களைத் தேடும் பணி நடந்து வரு​கிறது. இந்​தத் தருணத்​தில், எங்​கள் முன்​னுரிமை என்​பது உயிர்​களைக் காப்​பது, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆதரவு அளிப்​பது, மீட்புமற்​றும் நிவாரணப் பணி​களை மேற்​கொள்​வ​தாக உள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.காத்​மாண்​டு​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அந்​நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் சிஷிர் கனால் கூறிய​தாவது: இந்த பேரிட​ரால் ஏற்​பட்ட முழு சேதத்தை அளவிட அதி​காரி​கள் முயன்று வரு​கின்​ற​னர். 1,500 பேர் காணா​மல் போயுள்​ளனர். இவர்​களில் 300 பேர் இந்​தி​யர்​கள். அவர்​களில் பெரும்​பாலானோர் மானசரோவர் யாத்​திரி​கர்​கள். அவர்​களைத் தொடர்பு கொள்ள அரசு முயன்று வரு​கிறது.நேபாள குடிமக்​களின் பாது​காப்பு மற்​றும் நலனில் நாங்​கள் எவ்​வளவு அக்​கறை கொண்​டுள்​ளோமோ அதே அளவு வெளி​நாட்​டினரின் பாது​காப்பு மற்​றும் நலனிலும் நாங்​கள் அக்​கறை கொண்​டுள்​ளோம். இந்​திய அரசு ஏற்​கெனவே நிவாரண உதவி​களை அனுப்​பி​யுள்​ளது. நாங்​கள் எங்​கள் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கி​றோம்.