
டெல்லி, ஆகஸ்ட் 29- இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில், 4.5% சரிவுடன் 2.43 கோடி பயணிகள் மட்டுமே விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 2025 ஜூலையில் 2.55 கோடி பயணிகளாக இருந்ததை விட குறைவாகும். சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள தரவுகள் படி, 2025 ஜூலையில் 1.26 கோடி பயணிகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.20 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு பயணிகள் 4.74 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகள் 4.59 சதவீதம் குறைந்துள்ளனர்.மற்ற நகரங்களில் பயணிகள் குறைந்த நிலையில், டெல்லியில் மட்டும் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 63.3 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர், இது 2025 ஜூலையில் 66.3 லட்சம் பேராக இருந்தது.தமிழ்நாட்டிலும் விமான பயணிகள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பயணிகள் குறைந்துள்ளதாகவும், சென்னையில் 14 சதவீதம் குறைவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜூலையில் சென்னையில் 11,63,893 பேர் பயணித்த நிலையில், 2025 ஜூலையில் 13,54,143 பேர் பயணம் செய்துள்ளனர். 2026 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்த பயணிகள் எண்ணிக்கை 984.03 லட்சமாக இருந்தது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.64% அதிகரிப்பைக் காட்டுகிறது.












