
காட்மாண்டு, ஆகஸ்ட் 29-
நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா, “கைலாஷ் யாத்திரைக்காக 57 பேர் சென்று இருந்தோம். சீனாவில் இருந்தபோது காலை 8 மணியளவில் திடீரென புழுதி கிளம்பியது போல தெரிந்தது. அதனை செல்போனில் படம் பிடித்தபோது, சுனாமி போல் பெருவெள்ளம் எழுந்தது. அதில் இருந்து அனைவரும் ஓடினோம்,” என்று உருக்கமாக தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், “நேபாளத்தில் மீட்புக்குழுவினர் உதவியுடன், 3 மணி நேரம் மரங்களை பிடித்து நடந்து சென்றோம். தமிழ்நாடு அரசு எங்களை பாதுகாப்பாக மீட்டது மிகப்பெரிய உதவியாக இருந்தது,” என்றார்.அமைச்சர் ஆனந்த், “முதலமைச்சரின் ஆலோசனையின் படி, டெல்லியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை 4 அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக நடைபெறுகின்றன. வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் நலமுடன் திரும்புவார்கள் என்று நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.












