Home செய்திகள் உலக செய்திகள் உலக அழகி டொமினிகன் வெற்றி

உலக அழகி டொமினிகன் வெற்றி

நஹா ட்ராங்: செப். 6-
73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடைபெற்றது. இந்த வருடம் போட்டியில் 111 அழகியர் பங்கேற்றனர். டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ், 2026-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். இது டொமினிகன் குடியரசுக்கு 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பெருமை. 1982-ல் மரியாசெலா அல்வரெஸ் உலக அழகி பட்டம் வென்றதன் பின்னர், ஜோஹெய்ரி மோலா இப்போட்டியை வென்ற 2-வது டொமினிகன் அழகி ஆவார் ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றிருந்தார்.இவ்வாறு, உலக அழகிப் போட்டி வியட்நாமில் முதல் முறையாக நடப்பது குறிப்பிடத்தக்கது.