Home தலைப்பு செய்தி சிறுவன் கடத்தி கொடூர கொலை

சிறுவன் கடத்தி கொடூர கொலை

பெங்களூர்: செப்.18 –
பணத்திற்காக 13 வயது சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சிக்கஜாலா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எலஹங்கா விநாயகா நகரைச் சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 13). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாஸ்கர் ரெட்டி என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலை கரைப்பிற்கு வெடி வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் சிறுவனை அமர வைத்து வீடியோ எடுத்த பாஸ்கர் ரெட்டி, அதை பெற்றோருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர், மதுபோதையில் இருந்த பாஸ்கர் ரெட்டி ஹாலோ பிளாக் கல்லால் சிறுவனைத் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கொலைக்குப்பின் சிறுவனின் உடலை காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு ஆந்திரா நோக்கி தப்பிக்க முயன்றபோது, பதற்றத்தில் காரை சுவரில் மோதியதுடன் பெல்லாரி சர்வீஸ் சாலையில் தொடர் விபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளார். அங்கிருந்த வாகன ஓட்டிகள் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் காரைச் சோதனையிட்டபோது டிக்கியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், சிறுவன் விபத்தில் இறந்துவிட்டதாக பாஸ்கர் ரெட்டி நாடகமாடிய போதிலும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பணம் பறிப்பதற்காக கடத்திக் கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து பாஸ்கர் ரெட்டியைப் போலிஸார் கைது செய்த நிலையில், இதில் தொடர்புடைய மற்றொரு நபரான ஏழுசுண்டலவாடா என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பக்கத்து வீட்டு சிறுவன் என்று கூட பார்க்காமல் பயங்கரமாக கொலை செய்தது ஏன் உண்மையில் பணத்திற்காக தான் இந்த கொலை செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். சிறுவனை கொன்ற கொடூர நபருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்
இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை கடத்திக் கொள்ள உண்மை காரணம் என்ன என்பதை அறிய தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்