Home செய்திகள் உலக செய்திகள் டிரம்ப் குற்றச்சாட்டு

டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: செப். 22-
சிஎன்என், எம்எஸ்நவ், பொலிடிகோ செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்த நிலையில் அதிபர் டிரம்ப் ஊடகங்களை கடுமையாக சாடினார்.இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாவது: எதிர்மறையான செய்திகளை மட்டுமே எழுதும், அடையாளம் தெரியாத ஆதாரங்களை கொண்டு பொய்யான மற்றும் அவதூறான கதைகளை எழுதி நமது தேசியப் பாதுகாப்பை மீறும் நபர்களுக்கும், ஊடகங்களுக்கும், உலகின் மிக முக்கியமான அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படக்கூடாது. ஓவல் அலுவலகம் கண்ணியம், மரியாதை மற்றும் கவுரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.
என்னைப் பற்றிய அல்லது என்னோடு தொடர்புடைய ஏறக்குறைய ஒவ்வொரு செய்தியும் எதிர்மறையானது, தவறானது மற்றும் பல சந்தர்ப்பங்களில் நமது நாட்டிற்கு ஆபத்தானது. எனது சாதனைகள் எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும், அவர்கள் அவற்றை அற்பமானதாகக் காட்டி இழிவுபடுத்துகிறார்கள். இவ்வளவு நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஊடகங்கள் இருந்தும், நான் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றேன்? அதற்குக் காரணம் ஊடகங்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதுதான்.