Home மாவட்டங்கள் பெங்களூர் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்த வழக்கு: எம்.எல்.ஏ. மகள் பகிரங்க மன்னிப்பு

பெண் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்த வழக்கு: எம்.எல்.ஏ. மகள் பகிரங்க மன்னிப்பு

மண்டியா: செப்.22-
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், துமகூரு கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. பி.சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா கௌடா வீடியோ மூலம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ‘பீமன அமாவாசை’யை முன்னிட்டு, ஐஸ்வர்யா கௌடா தனது இரு குழந்தைகளுடன் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள ஆரதி உக்கடம்மா கோவிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது, கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்வது தொடர்பாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா பாட்டீலுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து க்யாதனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவால் மன்னிப்பு:
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா கௌடா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
ஐஸ்வர்யா கூறியது:
“கடந்த ஆகஸ்ட் 12 அன்று கோவிலில் அதிகக் கூட்டம் இருந்தது. என் குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சாமி தரிசனம் செய்யும்போது எனக்கும் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இதற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சவிதா பாட்டீலுக்கு இதனால் மனவேதனை ஏற்பட்டிருந்தால், அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.