Home மாவட்டங்கள் சென்னை நாளை முதல் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

நாளை முதல் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

சென்னை, செப். 27- நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான இன்று (செப்டம்பர் 27 – ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வங்கித் தேவை உள்ள வாடிக்கையாளர்கள் இன்று சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 2 சனிக்கிழமைகளில் மட்டும் வங்கிகள் செயல்படுகிறது. இதனால் மாதத்தில் 2 வாரங்கள் வங்கி ஊழியர்கள் 6 நாட்கள் வேலைக்கு வர வேண்டி உள்ளது. இந்நிலையில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்த அறிவித்துள்ளது.அதன்படி, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வங்கி ஊழியர்கள் போராட்டம்

இதற்கு முன்னதாக செப்டம்பர் 26 சனிக்கிழமையும், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் வார இறுதி விடுமுறை நாட்களாக உள்ளன. இதனால் வேலைநிறுத்தத்துடன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல நாட்கள் வங்கி சேவைகள் கிடைக்காமல் போவதைத் தவிர்க்கும் வகையில், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை செயல்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று வங்கிகள் திறப்பு

இதுதொட்ர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும். இதற்காக வங்கிக் கிளைகள் மற்றும் பிற வங்கி உள்கட்டமைப்புகளை இயக்குவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும், பொதுத்துறை மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களோட கிளைகளுக்குச் சென்று வழக்கமான வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.எஸ்பிஐ மேலும், வங்கி அலுவலகங்கள், ஏடிஎம்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கணக்கு தொடர்பான நேரடி சேவைகள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய அவசர வங்கி பணிகளை இன்று மேற்கொள்ளலாம். குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இன்று தனது அனைத்து கிளைகளும் திறந்திருக்கும் என்றும் வழக்கம்போல் செயல்படும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.