
லக்னோ, செப். 30-
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் கால் பதித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார்.
“சாமானிய மக்களின் குரலாக மாற விரும்புகிறேன். நம் நாட்டின் 80 ஆண்டுகால சுதந்திரத்துக்கான கணக்கைக் கேட்க விரும்புகிறேன். இன்றைய அரசியலில் அதிகாரம் இருக்கிறது; ஆரவாரம் இருக்கிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான சிந்தனை இல்லை. நாம் அரசியலை மாற்ற வேண்டும். நான் அரசியல் செய்வேன். ஆனால், எந்தக் கட்சியுடனும் சேர்ந்து அல்ல; உங்கள் அனைவருடனும் சேர்ந்து செய்வேன். நான் இங்கிருந்துதான் போட்டியிடுவேன்” என்று திவ்யா மிட்டல் கூறினார்.













