Home விளையாட்டு ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசல்

ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசல்

குவாஹாட்டி, அக். 1- மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 406 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்தி வெற்றி பெற்று சாதனை படைத்​தது இந்​திய அணி. குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 405 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான ஜாண் கேம்​பல் 68 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும், கேப்​டன் ஷாய் ஹோப் 94 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​களும், அமிர் ஜாங்கூ 77 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 114 ரன்​களும் விளாசி மிரட்​டினர். சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் ஓர் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​களை சேர்ந்த 3 வீரர்​கள் சதம் அடித்​துள்​ளது இதுவே முதன்​முறை​யாகும். மேலும் 405 ரன்​கள் என்​பது சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் அதி​கபட்ச ரன் குவிப்​பாக அமைந்​தது. இதற்கு முன்​னர் அந்த அணி கடந்த 2019-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் மைதானத்​தில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்​டி​யில் 389 ரன்​கள் குவித்​ததே அதி​கபட்​ச​மாக அமைந்​திருந்​தது. 406 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி கேப்​டன் ஷுப்​மன் கில், ரோஹித் சர்மா ஆகியோரது அதிரடி​யால் 43.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 406 ரன்​கள் எடுத்து சாதனை வெற்​றியை பதிவு செய்​தது. ஏனெனில் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் இதற்கு முன்​னர் இந்​திய அணி அதி​கபட்​ச​மாக 362 ரன்​களையே வெற்​றிகர​மாக துரத்​தி​யிருந்​தது. இந்த சாதனையை 2013-ம் ஆண்டு ஜெய்ப்​பூரில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டி​யில் நிகழ்த்​தி​யிருந்​தது. தனது 35-வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 75 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜெய்​டன் சீல்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். முதல் விக்​கெட்​டுக்கு ரோஹித் சர்​மா, ஷுப்​மன் கில் ஜோடி 26.2 ஓவர்​களில் 255 ரன்​களை வேட்​டை​யாடியது.