Home செய்திகள் தேசிய செய்திகள் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்க வாகனங்கள் நன்கொடை

கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்க வாகனங்கள் நன்கொடை

திருப்பதி, அக். 1-
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ள ஸ்ரீநிவாச மங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்க முலாம் பூசப்பட்ட புதிய யானை மற்றும் சிம்ம வாகனங்களை நன்கொடையாக வழங்கினர். ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி, திவ்யா பிரியங்கா ஆகியோர் ரூ.40 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்களை, கோயிலின் துணை நிர்வாக அதிகாரி வரலட்சுமியிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, வாகனங்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவை, கோயிலில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவில் பயன்படுத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி நிர்வாக அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் ராஜ்குமார், அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.