Home மாவட்டங்கள் சென்னை தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக உதயநிதி மீது வழக்கு

தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக உதயநிதி மீது வழக்கு

திருப்பூர், அக். 4- தமிழக முதல்வரை அவமானப்படுத்தும் விதத்தில் குழந்தையை வைத்து பேச வைத்தது, தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதிமுக, திமுக, ஆகிய கட்சிகள் முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதாக அக்கட்சி தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தங்களது பிரசாரங்களில் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு ஆளும்கட்சி தரப்பில் கண்டனம் எழுந்தது.இந்நிலையில், தாராபுரம் நகரில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் கமிஷனின் தடையை மீறி, எட்டு வயது சிறுவனை வேனில் ஏற்றி பேச வைத்தார். வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதுடன், முதல்வரை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக, திருப்பூர் போலீசார் விசாரித்தனர். அவர் பேசிய வீடியோ குறித்து பார்த்த பின், உதயநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.