Home மாவட்டங்கள் சென்னை மெட்ரோ ரெயிலில் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ஒன்றாக பயணம்

மெட்ரோ ரெயிலில் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ஒன்றாக பயணம்

சென்னை அக். 11-

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரையிலான சாலையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். உடனே பிரதமர் மோடி காரில் நின்றபடி மக்களுக்கு கை அசைத்தார். தமிழக பா.ஜனதா சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பட்டது. பிரதமர் மோடியின் வாகனத்துக்கு பின்னால் முதல்-அமைச்சர் விஜய் காரில் சென்றார்.

தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது மெட்ரோ ரெயில் சேவை குறித்து பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தை முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும்.

பின்னர் பிரதமர் மோடி யுபிஐ மூலம் பணம் செலுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற்றார். பின்னர் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் ஒன்றாக மெட்ரோ ரயில் பயணம் செய்தனர்