
துபாய், அக். 14- 2027-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 2 முதல் நவம்பர் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான டிக்கெட் முன்பதிவுக்கான குலுக்கல் முறை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அது தொடங்கி 12 நாட்களான நிலையில், 142 நாடுகளில் இருந்து 1.50 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
















