
துபாய், அக். 14- சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருது இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஷுப்மன் கில் பெறுவது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை இந்த விருதை வென்ற வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். 27 வயதாகும் ஷுப்மன் கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி, செப்டம்பர் மற்றும் 2025-ம் ஆண்டு பிப்ரவரி, ஜூலை மாதங்களிலும் சிறந்த வீரராக தேர்வாகி இருந்தார். சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் தொடக்க பேட்டரான ஷபாலி வர்மா தேர்வானார். அவர், 2-வது முறையாக இந்த விருதை பெறுகிறார். ஷபாலி வர்மா, ஆசிய விளையாட்டு போட்டியில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
















