Home செய்திகள் உலக செய்திகள் பிரான்ஸ் போராட்டப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

பிரான்ஸ் போராட்டப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

பிரான்ஸ், அக். 22-
பிரான்சில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.பிரான்சில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என தூதரகம் தெரிவித்துள்ளது. போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கும், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்தியர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் செய்திகளையும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை Site officiel du Gouvernement | info.gouv.fr என்ற இணையதளத்திலும், பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்த தகவல்களை இணையதளத்திலும் சரிபார்த்துக்கொள்ளலாம் என தூதரகம் கூறியுள்ளது. அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள், பாரிஸில் உள்ள இந்தியத் தூதரகத்தை +33 6 48 34 00 63 என்ற தொலைபேசி எண்ணிலும், cons.paris@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். மார்சேயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை +33 7 43 16 25 59 என்ற எண்ணிலும், cgo.marseille@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.