Home விளையாட்டு உலக மல்​யுத்​தப் போட்டி: நீலம், காஜலுக்கு வெள்ளி

உலக மல்​யுத்​தப் போட்டி: நீலம், காஜலுக்கு வெள்ளி

அஸ்தானா, அக். 29- கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடை​பெற்ற உலக மகளிர் மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​க​னைகள் நீலம் சிரோஹி, காஜல் தோசாக் ஆகியோர் வெள்​ளிப் பதக்​கம் வென்​றனர். நேற்று நடை​பெற்ற மகளிர் 50 கிலோ இறுதிப் போட்​டி​யில் நீலம் சிரோஹி 0-5 என்ற கணக்​கில் ஜப்​பான் வீராங்​கனை யூ சுசாகி​யிடம் தோல்வி கண்டு வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். மகளிர் 76 கிலோ பிரிவு இறுதிப் போட்​டி​யில் காஜல் 6-8 என்ற கணக்​கில் உக்​ரைனின் அனஸ்டாசியா அல்​பேயயேவாவிடம் வீழ்ந்து வெள்​ளியைக் கைப்​பற்​றினார்.