Home விளையாட்டு கடைசி டி20 ஆட்​டத்​தில் நியூஸிலாந்து வெற்றி

கடைசி டி20 ஆட்​டத்​தில் நியூஸிலாந்து வெற்றி

ஹாமில்​டன், நவ. 2- இந்​தி​யா​வுக்கு எதிரான கடைசி மற்​றும் 5-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது. டிம் செய்​பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடி​யால் நியூஸிலாந்து வெற்றி கண்​டது. இருந்​த​போதும் தொடரை 3-2 என்ற கணக்​கில் இந்​திய அணி கைப்​பற்​றியது. இந்​திய அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. முதலா​வ​தாக டி20 தொடர் நடை​பெற்று வந்​தது. முதல் 3 போட்​டிகளில் இந்​தி​யா​வும், 4-வது போட்​டி​யில் நியூஸிலாந்​தும் வெற்றி பெற்​றன. இதையடுத்து தொடரில் இந்​திய அணி 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் 5-வது மற்​றும் கடைசி டி20 ஆட்​டம் நேற்று பகல் 12.30 மணிக்கு ஹாமில்​டன் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலா​வ​தாக பேட்​டிங் செய்த இந்​திய அணி​யின் தொடக்க ஆட்​டக்​காரர்​கள் சஞ்சு சாம்​சன் 4 ரன்​களி​லும், அபிஷேக் சர்மா ஒரு ரன்​னிலும் வீழ்ந்​தனர். திலக் வர்மா 6, புவனேஷ்​வர் குமார் 6 ரன்​கள் சேர்த்​தனர். இஷான் கிஷான் அதிரடி​யாக விளை​யாடி 32 பந்​துகளில் தலா 5 பவுண்​டரி, சிக்​ஸர்​களு​டன் 61 ரன்​கள் விளாசினார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தன் பங்​குக்கு 23 பந்​துகளில் 50 ரன்​களை (3 பவுண்​டரி, 4 சிக்​ஸர்) அதிரடி​யாகக் குவித்​தார்.