Home செய்திகள் தேசிய செய்திகள் அக்டோபரில் யுபிஐ தினசரி பரிவர்த்தனை உச்சம்

அக்டோபரில் யுபிஐ தினசரி பரிவர்த்தனை உச்சம்

புதுடில்லி, நவ. 2-
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை அமைப்பான யு.பி.ஐ. வாயிலான பரிவர்த்தனைகளின் சராசரி தினசரி மதிப்பு, 2026 அக்டோபரில் முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்கிய நிலையில், சராசரி தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கையும் 82.2 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அக்டோபரில் மொத்தம் 2,547 கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது, 2025 அக்டோபரில் பதிவான 2,070 கோடி பரிவர்த்தனைகளைவிட 23 சதவீதம் அதிகமாகும்.அதேபோல், 2026 அக்டோபரில் ரூ.31.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025 அக்டோபரில் பதிவான ரூ.27.27 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இது 16 சதவீதம் அதிகமாகும். முந்தைய மாதமான செப்டம்பரில், 2,406 கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் வாயிலாக ரூ.29.37 லட்சம் கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றன. அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 2,450 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.29.82 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது.இதன் மூலம், அக்டோபரில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், அவற்றின் மொத்த மதிப்பும் முந்தைய மாதங்களையும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தையும் விட உயர்ந்துள்ளன.