
காந்திநகர், நவ. 2-
தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 143 தகுதியான கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 60 வயதைக் கடந்த 103 முதிய கைதிகளும், 40 பெண் கைதிகளும் பரோல் பெறுகின்றனர். மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பரோலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறைச் சீர்திருத்தம் மற்றும் கைதிகள் நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.













