Home மாவட்டங்கள் சென்னை ‘முரசு’ புயல் இன்று நள்ளிரவில் ஆந்திராவில் கரையை கடக்கிறது

‘முரசு’ புயல் இன்று நள்ளிரவில் ஆந்திராவில் கரையை கடக்கிறது

சென்னை: நவ. 2-
வங்​கக் கடலில் நிலை கொண்​டுள்ள ‘முரசு’ புயல், தீவிர புய​லாக வலுப்​பெற்று இன்று நள்​ளிர​வில் ஆந்​திர கடலோரப் பகுதி​யில் கரையை கடக்​கும். அப்​போது அதி​கபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். இதன் காரண​மாக சென்னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.
இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய அந்​த​மான் நிகோபார் தீவு​கள் மற்​றும் அந்​த​மான் கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலுப்​பெற்​றது. இது பின்​னர் மேலும் வலு​வடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புய​லாக மாறியது.
இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இது மேலும் வலுப்​பெற்று தீவிர புய​லாக மாறக்கூடும். மேற்கு அல்​லது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்​திரப் பிரதேச கடலோரப் பகுதி​களுக்கு அரு​கில் நெல்​லூர் மற்​றும் நரசாப்​பூர் இடையே இன்று நள்​ளிரவு அல்​லது நாளை அதி​காலை கரையை கடக்​கக்​கூடும்.
இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.2) சென்னை மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை, வேலூர் மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.
3-ம் தேதி நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்​னலுடன் கூடிய கன அல்​லது மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.
‘முரசு’ புயல் பெயர் காரணம்: உலக வானிலை நிறு​வன அறி​வுறுத்​தல்​படி, வங்​கக்​கடல் மற்​றும் அரபிக்​கடல் பகுதி​களில் உரு​வாகும் புயல்​களுக்கு பெயர் வைப்​ப​தற்​காக இந்​தியா உள்​ளிட்ட 13 நாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு ஏராளமான பெயர்​களை பரிந்​துரை செய்​திருந்​தன. அதன்படி புயல்​களுக்கு பெயரிடப்​பட்டு வரு​கின்​றன. இதில் இந்​திய வானிலை மையம் பரிந்​துரை பெய்த தமிழ் பெயர் ‘முரசு’, தற்​போது வங்​கக்​கடலில் உரு​வாகி​யுள்ளபுயலுக்கு சூட்​டப்​பட்​டுள்​ளது. இப்​பெயரை, 2020-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநராக இருந்த நா.புவியரசன் இந்​திய வானிலை ஆய்வு மையத்​துக்கு பரிந்​துரை செய்​தது குறிப்​பிடத்​தக்​கது.

புயல்: 11 விமானங்கள் ரத்து: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல், சென்னைக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், சென்னைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் மொத்தம் 11 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 5 புறப்பாடு விமானங்களும், 6 வருகை விமானங்களும் அடங்கும்.
சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா செல்லும் சிறிய ரக விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.