Home செய்திகள் தேசிய செய்திகள் பிஜேபியில் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

பிஜேபியில் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

சண்டிகர்: நவ. 2-
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் ஆம்ஆத்மி கட்சி 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேத்தன் சிங் ஜோரமஜ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் வெளிப்பட்டது.இந்த நிலையில், ஆம்ஆத்மி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப்பும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பஞ்சாப்பை ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது ராஜினாமா குறித்து குன்வர் விஜய் பிரதாப் சிங், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் பஞ்சாப் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மக்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் எனது கடைசி மூச்சு உள்ளவரை கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான குன்வர் விஜய் பிரதாப் சிங், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்.ராஜினாமா செய்த மூன்று எம்எல்ஏக்களும் இன்று பாஜகவில் இணைந்தனர். இதற்காக அவர்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றனர். அங்கு அவர்கள் பாஜகவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.