Home செய்திகள் தேசிய செய்திகள் இரு குழந்தை விதி தேவையா?

இரு குழந்தை விதி தேவையா?

புதுடெல்லி: நவ. 5-
மகாராஷ்டிர மாநிலத்தில் மங்களா பீமாராவ் இங்ளே என்பவர் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் ஊராட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்ற மாநில சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மங்களா பீமாராவ் இங்ளே தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2003-ஆம் ஆண்டில் சராசரியாக மூன்று குழந்தைகள் என்றிருந்த நிலை, தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கட்டுப்பாடு இனியும் தேவையா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.