Home மாவட்டங்கள் பெங்களூர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 601 பேர் மீது வழக்கு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 601 பேர் மீது வழக்கு

பெங்களூரு, நவ. 9- பெங்களூரு நகரில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 36,398 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 601 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 2-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை நகரில் உள்ள 53 போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிடிபட்ட 601 பேரின் ஓட்டுநர் உரிமங்களும் (டி.எல்.) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்கிய 240 பேர்
மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்களுக்காக ஒரே வாரத்தில் மட்டும் ரூ.2.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு எந்தக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்டக்கூடாது என்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திக் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.